உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
118 பார்வைகள்

நுவரெலியா, பிளக்பூல் மற்றும் மகஸ்தோட்ட பகுதிகளுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற 400 சி.சி (400cc) மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் இரு பந்தய வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாநகர சபை மற்றும் கொழும்பிலுள்ள தனியார் சங்கம் என்பன இணைந்து நேற்று மற்றும் இன்று திங்கட்கிழமை (17) இப் பந்தய நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

நுவரெலியா – அம்பேவளை பிரதான வீதியில் பிளக்பூல் பாலத்திலிருந்து ஆரம்பமாகும் இப் பந்தயம், செங்குத்தான மலைகள் மற்றும் வளைவுகள் நிறைந்த தேயிலைத் தோட்டங்களை ஊடறுத்து மகஸ்தோட்டம் வரை செல்லும் நேரக் கணிப்புப் பந்தயமாக நடத்தப்படுகின்றது.

பல போட்டியாளர்கள் பங்கேற்ற இப் பந்தயத்தின் போது, நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

28 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0