உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
101 பார்வைகள்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து புறப்பட்ட வி.என்.671 என்ற இலக்கத்தைக் கொண்ட எயார்பஸ் ஏ320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

புதிய விமான சேவையை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

விமானத்துக்கு பாரம்பரிய நீர்த்தாரை மரியாதை செலுத்தப்பட்டது.

முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததுடன், அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய நேரடி விமான சேவையின் கீழ் வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலங்கை – வியட்நாம் இடையே விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு விமானப் பயணத்துக்கு சுமார் 4 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

120 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

98 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

118 0 0