உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டாக சீரழித்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
105 பார்வைகள்

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு கூட்டு துஸ்பிரயோகம் செய்து விட்டு வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக்கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்றயதினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மீட்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க, பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0