உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இலங்கையில் முதல் முறையாக அதிகளவான ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
125 பார்வைகள்

இலங்கை ஊடக வரலாற்றில் ஒரே தடவையில் பல மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் , செல்போன்கள் வழங்கிய வரலாற்று சாதனையை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் படைத்துள்ளது.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை தனியார் ஹோட்டலில் இன்று 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றபோதே இலண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் 65 ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகளும் 25 ஊடகவியலாளர்களுக்கு செல்போன்களும் என சுமார் 1.5 கோடி ரூபா மதிப்புள்ள இலத்திரனியல் உபரணங்களை வழங்கியே இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஸ்ரீகஜன், செயலாளர் கே.ஜெயந்திரன் ஆகியோர் தலைமையில் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப் பிரியாவின் நெறியாள்கையில் தியாகராஜ கலைக்கோவில் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸ் பங்கேற்றார்.

சீவரட்ணம் முறேஸின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு ஆளுயர மலர்மாலைகள்,தலைக்கிரீடம் அணிவிக்கப்ட்டும் பொன்னாடைகள் போர்த்தப்பட்டதுட அவரின் சமூக சேவைகளை பாராட்டி பாராட்டுக் கவிதை காணொலியும் வெளியிடப்பட்டது.

அவர் தனது உரையின்போது தான் சிறு வயதில் பட்டதுன்பங்கள், வறுமையில் வாடிய தனது தாயார் தன்னை வளர்க்க பட்ட கஷ்டங்களை மிகவும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்

சிறப்பு விருந்தினர்களாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான எம்.செந்தில்நாதன், மூத்த ஊடகவியலாளரும் முரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.வித்தியாதரன், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.வீரசுதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன் முன்னாள் பிரதம ஆசிரியர்கள், மூத்த ஊடகவியலாளர்கள் பலரும் பங்கேற்றிருந்த இந்நிகழ்விலேயே இலண்டனின் பிரபல தொழிலதிபரும் பிரபல சமூகசேவையாளருமான சீவரட்ணம் முறேஸின் நிதி அனுசரணையில் நாட்டின் பல மாவட்டங்களையும் சேர்ந்த 90 தமிழ் ,முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் செல்போன்கள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

33 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

25 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி மனிதப் படு கொ*லைக்கு சர்வதேச விசாரணையே தீர்வு.!

“தமிழினப் படு கொலைக்கு கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள் செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது…

43 0 0