உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கேதீச்சரத்திலும் விகாரை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் திட்டம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
129 பார்வைகள்

திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அநுர அரசாங்கத்தின் தொல்லியல் திணைக்களம் இரவேடு இரவாக யாருக்கும் தெரியாமல் எவரும் இல்லாத நேரத்தில் தொல்லியல் திணைக்கள அனுமதி இல்லாமல் இனி எந்த அபிவிருத்தியும் செய்ய முடியாது என பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியுள்ளனர்.

ஆலய நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் அரச திணைக்களம் திருட்டுத்தனமாக ஏன் பெயர்ப்பலகை இட வேண்டும் என பொது மக்கள் கேள்வி எழுப்பு கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் இதே போன்ற செயற்பாட்டின் மூலமே முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் மற்றும் கன்னியாய் பிள்ளையார் ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் அதன் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் நீதிமன்ற கட்டளைகளை மீறி செயற்பட்டனர்.

திருக்கேதீச்சரத்திலும் எதிர் காலத்தில் சிங்கள பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் ஆலய வளகத்திற்குள் அடாவடியாக பெயர்பலகை நாட்டியுள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என கூறும் ஐனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவின் பதில் என்ன? இரவேடு இரவாக பெயர்பலகை நாட்டியது சட்டவிரோதம் இல்லையா?

குருந்தூரில் இந்துமாத தொல்லியல் சின்னங்கள் அகற்றப்பட்டு சிங்கள பௌத்த சின்னங்கள் இருப்பதாக கட்டுகதை ஒன்றை உருவாக்கி விகாரை அமைத்தது போன்ற செயற்பாடுகள் எதிர் காலத்தில் திருக்கேதீச்சரத்திலும் இடம்பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

2 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

24 0 0