உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்கள் விற்பனை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
37 பார்வைகள்

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்குச் சொந்தமான 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடநூல்களை 47,000 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு வெளி நபர் ஒருவருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் 5 பேரும் இன்று சனிக்கிழமை (15) கடுவலை நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டுக்கான தமிழ் மொழி பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் அடங்கலாக 19,892 புத்தகங்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்தே இச்சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற சரக்கு ஊர்தி ஓட்டுநர், அத்தனை புத்தகங்களையும் பழைய காகிதங்கள் கொள்முதல் செய்யும் நபர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தலங்கம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0