தீப்பிடித்து எரிந்த உலங்கு வானூர்தி.!
மலேசியாவின் சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் உள்ள பராமரிப்புப் பகுதியில் காமோவ் கா-32 (Kamov Ka-32) ரக உலங்கு வானூர்தி எஞ்சின் பரிசோதனையின்போது தீப்பிடித்து எரிந்துள்ளது.
இன்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற இந்த தீ விபத்தில் உலங்கு வானூர்தி முற்றிலும் தீக்கிரையானது.
அதில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், உலங்கு வானூர்தியின் சிதைவுகள் பட்டு வெளியே நின்ற ஒருவர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.