உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கை வைத்தியர்கள் படைத்த சாதனை; மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றல்.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
89 பார்வைகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரின் உடலில் இருந்து 3 கிலோ 100 கிராம் எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்த சத்திரசிகிச்சை நேற்று (14) சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளவில் இதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோ எடையுடைய சிறுநீரகக் கல் ஒன்று அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சத்திரசிகிச்சை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில், டொக்டர் எம்.எம். ரிஷ்லி, டொக்டர் ஜே.எம். இஹ்ஸான், டொக்டர் சீ. பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வளவு அதிக எடையுடைய சிறுநீரகக் கல் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளமை மருத்துவத் துறையில் முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0