உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஷிரான் பாசிக் கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
200 பார்வைகள்

டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார்.

இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார். இந்நிலையில், ஈரான் – அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம்/ தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

103 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

101 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

114 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

107 0 0