உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இராணுவத்தினரின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்! – கஜேந்திரன் எம்பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
122 பார்வைகள்

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் நிரந்தர காணி மற்றும் கட்டடம் இராணுவ வசமுள்ள நிலையில் அஞ்சல் அலுவலகம் தற்காலிக இடந்தில் இயங்கி வருவது தொடர்பில் ஆராயும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது தற்காலிகமாக இயங்கி வரும் அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று உரிய காணி தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தின் நிரந்தர காணியை நேரில் சென்று பார்வையிட்டார். அஞ்சல் அலுவலக அலுவலர்கள் உரித்தான காணியை பாராளுமன்ற உறுப்பினருக்கு காண்பித்தனர்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பலாலி விஸ்தரிப்பு என்று கூறிக் கொண்டு பலாலி விமான நிலையத்தில் இரண்டாம் கட்டம் இந்திய அரசின் நிதியில் நிர்மாணிக்க வேண்டிய ஓடு பாதை முதல் நிர்மாணப் பணிகளையே அரசு இன்னும் தொடங்கத் தயாராக இல்லை.

இந்திய அரசு நிதியை வழங்கத் தயாராக இருந்தும் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை அரசு முன்னெடுக்காத வரை மக்கள் தமது காணிகளை விமான நிலைய விஸ்தரிப்பிற்கு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

121 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

100 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0