உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
101 பார்வைகள்

எதிர்வரும் 30-ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடு ஒன்று நடத்துவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த மாநாடு தொடர்பாகவும், இந்த மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், இந்த மாநாட்டுக்கு ஆதரவை ஆதரவைக் கேட்டுக்கொள்ளும் முகமாகவும் இந்தச் கலந்துரையாடல் அமைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அதேபோன்று சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார் அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை பாதர் டேவிட் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அதேபோன்று ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதில் முக்கியமான சில விடயங்களும் மாநாடு தொடர்பான கருத்துக்களும் அதில் பகிரப்பட்டன.

அதேபோன்று மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன் மாநாட்டினை முன்கொண்டுசெல்வதற்கு அனைவரையும் ஒத்துழைப்பும் இதன்போது கோரப்பட்டது.

இந்த சர்வதேச மாநாடு சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் முகமாக, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்த தாய்மாரால் ஒரு சர்வதேசத்திற்கு எங்களுக்கு நடந்தது ஒரு காணாமல் ஆக்கப்படுதலும் ஒரு இன அழிப்பும், திட்டமிட்ட இன அழிப்பும் என்பதை எடுத்துக்கூறும் முகமாக இந்த மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டிலன் அனைத்துச் சமூகமும் இதில் பங்குபற்றி, தாய்மாரினுடைய வலிகளை உணர்த்துற ஒரு மாநாடாக அது அமைய இருக்கின்றது.

அதன் அடிப்படையில் இதுவரைக்கும் எங்களோடு தேடி, தேடினதுல இறந்த தாய்மார்கள் 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய சாட்சியங்களைப் பதிவுசெய்து புத்தகங்களாக வெளியிடுறது அழிக்கப்பட்ட சாட்சியங்கள் என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் நாங்கள் போராட்டங்களில் கையளிக்கப்பட்ட அறிக்கைகளை ஒரு புத்தக வடிவமாக்கி வடிவமாகவும், அதில புத்தகங்களாக நாங்கள் வெளியிட இருக்கிறோம் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

அதேபோன்று பல்வேறு அம்சங்கள் அந்த மாநாட்டிலே இடம்பெற இருக்கின்றது. அதில பேனல் டிஸ்கஷன் சிறப்புரைகள், கண்காட்சிகள், இப்படியான பல்வேறுபட்ட பேரணி, இப்படியான பல்வேறுபட்ட தொடர்ச்சியான அந்த மாநாட்டின் நிகழ்வுகளாக அமைய இருக்கின்றது.

அதற்கு சர்வதேச ரீதியாகவும், வடக்கு-கிழக்கு சார்ந்த ரீதியாகவும் அனைவரும், தமிழ் தேசியத்தோடு பயணிக்கிற அனைவரும் எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கு, அநீதிக்கு நீதி பெற்றெடுப்பதற்கு அனைவரும் இதில் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றெடுப்பதற்கு எல்லாரும் முன்வர வேண்டும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, இலங்கை…

103 0 0
இலங்கை செய்திகள்

நாடெங்கும் 2027 பட்ஜட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.!

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 25 ஆயிரம் ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

101 0 0
இலங்கை செய்திகள்

தேர்தலை முடக்கி ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதா?

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள், கொழும்பு…

114 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

107 0 0