சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் “சிப்தொற” புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!
சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் உயர்தர கற்றல் நடவடிக்கைக்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் “சிப்தொற”புலமைப்பரிசில் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டு வருகின்றது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் பிரதேச சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது 79மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


