உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நவீன மயப்படுத்தப்படும் சாட்டிக் கடற்கரை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

சாட்டிக் கடற்கரையை அபிவிருத்தி செய்து, பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக மாற்றி உல்லாசப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்கும் நோக்கிலான செயற்றிட்டத்தின் கீழ், கடற்கரையின் நுழைவாயில் மற்றும் சுற்றுவேலி அமைக்கும் பணிகள் இன்று (14) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில், சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (14) பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சாட்டிக் கடற்கரையின் வீதிப் பகுதியிலிருந்து கடற்கரைப் பகுதிக்கான அணுகலை கட்டுப்படுத்தும் வகையில் கம்பி வலை அமைத்தல், நுழைவாயில் அமைத்தல் மற்றும் சாலையோரப் படிகளை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நிறைவேற்று நிறுவனமாகக் கொண்டு, வேலணை பிரதேச சபையினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுமார் 73 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இந்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் எதிர்வரும் கார்த்திகை மாதத்திற்குள் முழுமையாக நிறைவுசெய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சாட்டிக் கடற்கரையின் பாதுகாப்பு மற்றும் அழகை மேம்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அப்பகுதியை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

103 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

119 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0