தொழில்நுட்ப உலகில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டல்.!
சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினரால் (Center for child development) இன்றைய தினம் child first (uk) நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாகவும், மாணவர்களின் எதிர்கால கல்வியின் தேவையின் பொருட்டு தொழில்நுட்ப உலகில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை மாணவர்களுக்கு அறிவூட்டியிருந்தது.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
குறித்த அமைப்பானது தொடர்ச்சியாக Child first (UK) அமைப்பின் நிதி உதவியுடன், CFCD இந்தப் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் மாலை நேர வகுப்புகளை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




