உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம்; தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
80 பார்வைகள்

4 வயதுடைய சிறுமி ஒருவரைக் கொடூரமான முறையில் தாக்கி, வீதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் தாயாரும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்துகாமம் – யட்டிராவன பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அச்சிறுமியை வத்துகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுமியை கொடூரமாகத் தாக்கி, அவரை நடுவீதியில் விட்டுச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரையும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களான தாயும் அவரது கள்ளக்காதலனும் முச்சக்கரவண்டி ஒன்றில் ஹாலிஎல – கெட்டவல வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (14) முற்பகல் வேளையில் ஹாலிஎல பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் ஹாலிஎல பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

81 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

82 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

56 0 0