உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் சிங்கள திரைப்படம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
118 பார்வைகள்

சர்ச்சைக்குரிய வகையில் கைதாகிப் பின்னர் விடுவிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் புதிய சிங்களத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை (12) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, வைத்தியர் ஷாபி கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

வைத்தியர் ஷாபி சவால்கள் நிறைந்த நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டபோது, பாதுகாப்பான சூழலைத் தேடி கல்முனைப் பகுதியில் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கைப் பயணத்தில் கல்முனை நகரம் ஒரு முக்கிய அடைக்கலப் பகுதியாக விளங்கியதன் காரணமாகவே, திரைப்படக் குழுவினர் அத்தியாவசியக் காட்சிகளை கல்முனையில் படமாக்கி வருகின்றனர்.

அந்நாட்களில் துன்பத்தில் இருந்த அவருக்குக் கல்முனைப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஆறுதலும், நம்பிக்கையும், மனபலமும் அளிப்பது போன்ற காட்சிகள் உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை முழு உலகிற்கும் நேர்மையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் எடுத்துரைக்கும் ஒரு படைப்பாக இத்திரைப்படம் உருவாகி வருவதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

106 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

107 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0