உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

வீரமுனை படுகொ@லை நாள் அனுஸ்டிப்பு!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
57 பார்வைகள்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் வீரமுனை படுகொ@லை நாள் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

12-08-1990ஆம் ஆண்டு முஸ்லிம் ஊர்காவல் படையிரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ஆலயம் மற்றும் பாடசாலைகளில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடாத்தி சுமார் 85க்கும் அதிகமான மக்களை படுகொ@லைசெய்த நாளினைக் குறிக்கும் வகையில் இந்த வீரமுனை படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

12-08-1990ஆம் ஆண்டு வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயம்,வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் மீது விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்த முஸ்லிம் ஊர்காவல் படையினரால் இந்த மிலேச்சத்தனமாக படுகொ@லை நடாத்தப்பட்டது.

வெட்டியும் சுட்டும் தாக்கியும் சுமார் 85க்கும் அதிகமானோர் இதன்போது படுகொ@லைசெய்யப்பட்டனர்.இதன்போது படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயிருந்தனர்.

அவர்களுக்கு இதுவரையில் என்ன நடந்தது என்ற நிலை இதுவரையில் தெரியாத நிலையில் 36 வருடங்களை கடந்துள்ளபோதிலும் வீரமுனை படுகொலைக்கு இதுவரையில் எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் வீரமுனையில் வீரமுனை படுகொ@லை நினைவேந்தல் நிகழ்வுகள் வீரமுனை மக்களால் நடாத்தப்பட்டது.

இன்றைய தினம் வீரமுனை சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள படுகொ@லை நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1990ஆம் ஆண்டுகளில் வீரமுனை, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, மல்வத்தை, புதுநகர், கணபதிபுரம், கோரக்கர்கோயில், மல்லிகைத்தீவு மற்றும் அதனைச்சூழவுள்ள பகுதி மக்கள் வீரமுனை பாடசாலை மற்றும் சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.

இதன்போது ஊர்காவலம் படையினர் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினரினால் திடீர் திடீர் என சுற்றிவளை;ககப்பட்டு பலர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே 12-08-1990ஆம் ஆண்டு வீரமுனைக்குள் இந்த படுகொலை நடாத்தப்பட்டன.

இன்று காத்தான்குடி படுகொ@லை மற்றும் ஏறாவூர் படுகொலை தொடர்பில் பேசும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் வீரமுனை படுகொ@லை தொடர்பில் பேசுவதற்கு முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

2 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

120 0 0