உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நுவரெலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
63 பார்வைகள்

கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 குடும்பங்களுக்கு சுமார் 5000/= பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று 13 ஆம் திகதி வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு இன்று மதியம் 3.மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாச்சார மண்டபத்தில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கண்டி இந்திய உதவி தூதரக அதிகாரிகளான திரு.யோகேஸ்வரன் மற்றும் திரு.தினேஷ்குமார் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் மற்றும் வட்டார உறுப்பினர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார, மஸ்கெலியா கிராம உத்தியோகத்தர் திரு.குணதிலக்க, முன்னாள் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் கணபதி நகுலேஸ்வரன் அடங்கலாக பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 164 பயனாளிகளுக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் அவர்களினால் கண்டி இந்திய உதவி தூதரக உதவி தூதுவர் திருமதி அதிமேதகு சரண்யா எஸ்.கே.அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து இந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

114 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

111 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0