உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மித்தெனிய துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
63 பார்வைகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு துப்பாக்கிதாரிகள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

ஊருபொக்க – மாத்தறை வீதியின் தம்பஹல பொல்வத்த பகுதியில் உள்ள மதகிற்கு அருகாமையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையிலேயே இது மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றத் தகவலுக்கு அமைய, ஊருபொக்க பொலிஸாரினால் இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலஹிட்டியாவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்கு நேற்றைய தினம் (12) பிற்பகல் வேளையில் வந்த இனந்தெரியாத இருவர், இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார், மித்தேனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு கைத்துப்பாக்கி (Pistol) ரகத்தைச் சேர்ந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், இந்த படுகொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0