உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
71 பார்வைகள்

உலுக்குளம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம வீதியின் பாவற்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (12) டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உலுக்குளம திசையை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பாவற்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபராவார்.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அதில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து உலுக்குளம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

103 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

119 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0