உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவன்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
110 பார்வைகள்

பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவன் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், லுணுகலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவன் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து இறங்கி, லுணுகலை பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது மாணவனிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனை இன்று பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

90 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0