பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகவெவ பகுதியில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஆவார்.
தனமல்வில பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 64 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மற்றும் சுமார் 40 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 4,210 கஞ்சாச் செடிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.