உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
55 பார்வைகள்

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91,000 ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாடு பிரிவு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய டெங்கு கண்காணிப்பு அமைப்பின் அண்மைக்கால அறிக்கையின்படி,
நாட்டில் இதுவரை மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தின் முதல் 12 நாட்களுக்குள் மாத்திரம் 5,714 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தில் மட்டும் 29,971 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவான எண்ணிக்கையாகும்.

தற்போது இறப்பு விகிதம் 0.075 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

நாட்டிலேயே அதிகளவாக 19,406 நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 21.31 சதவீதமாகும்.

கொழும்பு மாவட்டத்தில் 18,101 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த நோயளார்களில் 19.88 சதவீதமாகும்.

இவ்விரு மாவட்டங்களிலும் சேர்த்து மட்டும் 37,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய ரீதியில் பதிவான மொத்தப் பாதிப்பில் 41 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும்.

நாடளாவிய ரீதியில் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ‘அதிதீவிர அபாயப் பகுதிகளாக’ அடையாளம் காணப்பட்டுள்ளன.

வாராந்த சராசரியாக நாளொன்றுக்கு 1,509 புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சூழலைத் தூய்மையாகப் பேணி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

97 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

118 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0