உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் கோலாகலம்

தரிசனம் 4 வாரங்கள் முன்
107 பார்வைகள்

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ இன்று நடைபெற்றது.
தீர்த்தம்,மூர்த்தி,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 03ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
நேற்றைய தினம் ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றிருந்தது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சிவ சுகுமார குருக்கள் தலைமையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று தம்ப பூஜை நடைபெற்று,திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் எருது வாகனத்தில் எழுந்தருளி மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கரையினை நோக்கி ஊர்வலமாக சென்றார்.
அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இராமபிரான் தனது தந்தையின் மரணத்திற்காக பிதிர்க்கடன் செலுத்தியதாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆயிரக்கணக்கானோர் இன்றைய தினம் தமது பெற்றோருக்கு பிதிர்க்கடன்களை செலுத்தியதையும் காணமுடிந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

தரிசனம்

மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய மணவாளக்கோல உற்சவம்.!

யாழ். வடமராட்சி கிழக்கு, முள்ளியான் மண்டலாய்ப் பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 2…

104 0 0
தரிசனம்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

91 0 0
தரிசனம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின்…

120 0 0
தரிசனம்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

140 0 0