உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தார் வல்லிபுர ஆழ்வார்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
91 பார்வைகள்

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று மிக விமர்சையாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வடமராட்சியில் குவிந்தனர்.

அரோகரா முழக்கங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் ஒலிக்க, விசேடமாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வல்லிபுரம் ஆழ்வார் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார்.

ஆலயத்தின் வீதிகளில் பக்திப் பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதிஷ்டை செய்தும், பல்வேறு காவடிகளைத் தாங்கியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி ஆழ்வாரின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர் குழுவினரும் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

98 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

100 0 0