உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்.!

இலங்கை செய்திகள் 20 மணி நேரம் முன்
50 பார்வைகள்

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா நேற்று நடைபெற்ற ஆயிரக்கணக்கான அடியார்களின் தீ மிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.

கடந்த 09ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்தது.

ஞாயிற்றுக்கிழமை பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் திங்கட்கிழமை அம்பாளின் ஊர்காவல் திருஉலா நடைபெற்றது.

உற்சவகால பிரதமகுரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ குமாரலிங்கம் பூசகர் தலைமையிலான பூசகர்களினால் இந்த சக்தி விழா சிறப்பாக நடாத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை அன்னையின் சக்தி மஹா யாகம் நடைபெற்றதுடன் பிற்பகல் நோற்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் மாலை கடல்குளிப்பு நடைபெற்றது.

நேற்றைய தினம் காலை சக்தி பூஜை நடைபெற்று தேவாதிகள் சகிதம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் தீமிதிப்பு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த தீ மிதிப்பு உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் பங்குகொண்டதுடன் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான மக்கள் உற்சவத்தில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

81 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

83 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0