உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
65 பார்வைகள்

இன்று மதியம் 2 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமி மலை பகுதியில் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் உள்ள வனப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்ட அந்த பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.

தோட்ட முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி கவனத்திற்கு கொண்டு வந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை சுமார் 5 அடி நீளமும் 18 அங்குலம் உயரம் கொண்டது என நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0