உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

படகு கவிழ்ந்து விபத்து; இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
68 பார்வைகள்

கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள களப்பு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துனர்.

இச்சம்பவத்தில் 07 வயதுடைய சிறுவன் ஒருவனும், 13 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடி வலைகளைச் சேகரிப்பதற்காக இக்குடும்பத்தினர் படகில் பயணித்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்ட அவர்களின் தந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

84 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

84 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

57 0 0