ரத்மலானே சைமா உட்பட மூவர் அம்பலப்படுத்திய பல தகவல்கள்; சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்.!
அநுர அரசாங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் கடுமையான நடவடிக்கை காரணமாக மேலும் பல அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ரத்மலானே சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலகச் சந்தேகநபர்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.
இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலரும் சிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுடன் தொலைபேசித் தொடர்புகளைப் பேணிய 10 நபர்கள் குறித்த தகவல்கள் வெளிவரவுள்ளதுடன் அவர்களுக்குக் குற்றச் செயல்களைச் செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கிய நபர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த குழுவினருக்கு ஆயுதங்களை வழங்கியவர்களையும் எதிர்வரும் காலத்தில் கண்டறிய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.