உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்தவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
50 பார்வைகள்

அநுராதபுரம் – கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த இளைஞன் ஒருவர் கல்நேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கல்நேவ பொலிஸ் குழுவினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா அடங்கிய 94 சிறிய பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், கஞ்சா கலந்த போதைப்பொருட்கள் அடங்கிய 150 கிராம் நிறை கொண்ட 15 போத்தல்கள், 250 கிராம் நிறை கொண்ட 21 போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கஞ்சா கலந்த போதைப்பொருட்களின் மொத்த நிறை 9 கிலோகிராம் 296 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்நேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0