உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தீவிரமடையும் ஈரான் போர்! – மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல்!!

உலக செய்திகள் 1 வாரம் முன்
104 பார்வைகள்

அமெரிக்காவும், ஈரானின் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களும் கப்பல்கள் மீதான தனித்தனித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அதேநேரம் அமெரிக்கா தமது நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியுள்ளதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறைவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமாக விளங்கும் ஓமான் வளைகுடா மற்றும் செங்கடலின் நுழைவாயிலில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறியபோதிலும், இந்தப் போர் முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை குறைந்ததால், எண்ணெய் விலைகள் உயர்ந்து உலகளாவிய பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

அதற்கமைய பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் 1.4% உயர்ந்து பீப்பாய்க்கு 89.34 ஆகவும், WTI ரக கச்சா எண்ணெய் 1.3% உயர்ந்து 83.63 ஆகவும் விற்பனையாகின்றது.

செங்கடலின் தெற்கு முனையில் உள்ள பாப் எல்-மண்டேப் நீரிணையில் நேற்று சிறிய சரக்குக் கப்பல் மீது ஹூதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டதாக யேமனின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹூதி எதிர்ப்பு இராணுவக் குழுவைச் சேர்ந்த இரண்டு யேமன் மீட்புக் குழுவினரும் கொல்லப்பட்டதாக யேமன் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

எகிப்திற்குச் சொந்தமான ‘திஹாமா’ (Tihamah) கப்பலில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து யேமனின் ஈரான் ஆதரவு குழுவான ஹூதிகள், கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களில் நிகழ்ந்த முதல் மரணங்களாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0