உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் சுரேரஞ்சன் அவர்களின் உடலிற்கு நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
58 பார்வைகள்

நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முன்னாள் செயலாளரும்,  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான இரத்தினசாபாபதி சுரேரஞ்சன் அவர்களின் உடலிற்கு  அரசியல்வாதிகள்,  வர்த்தகர்கள்,  பொதுமக்கள்,  வாடகை வாகன உரிமையாளர்கள், மற்றும்  சாரதிகள் நடத்துனர்கள் என  நூற்றுக் கணக்கானவர்கள் இன்று  அஞ்சலி செலுத்தினர்

கடந்த 08/08/2026 அன்று சுகயீனம் காரணமாக தனது 49 வது வயதில் உயிரிழந்த சுரேரஞ்சன் அவர்களின் உடலிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பிரதேச மக்கள் என பலரும் மலர் வளையம் வைத்தும் மலர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர்.

பிரதேசம் மக்களுக்கும் வர்த்தகர் சங்கத்திற்கும், தமிழ் தேசிய சிந்தனையோடு   பல்வேறு சமூக சேவைகளை ஆற்றியவர் என  அரசியல்வாதிகள்,  வர்த்தவர்கள்,  பொதுமக்கள் என பலரும் நினைவுகூர்ந்து அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

இங்கு உரை நிகழ்த்திய யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  சுரேரஞ்சன் அவர்களது இழப்பு  அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தமிழ்  சமூகத்துக்கும் பேரிழப்பாகும் என்றும், ஒரு தமிழ் தேசிய சிந்தனையாளன், தமிழ் தேசிய  செயற்பாட்டாளனை இந்த பிரதேசம் இழந்து நிற்கிறது என்றும்,  அவருடைய எண்ணம் சிந்தனை எல்லாம் தமிழ் தேசியத்திற்காகவும் மக்களுடைய நலன்களுக்காகவே இருந்தது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக  இன்று காலை சுரே ரஞ்சன்  அவர்களது இல்லத்தில் சமய கிரிகைகள்  இடம் பெற்று அங்கிருந்து உடலம்   நெல்லியடி பஸ் தரிப்பு  நிலையத்தில் நெல்லியாடி வர்த்தகர்களால்  அஞ்சலி கூட்டம் நடத்திய போதே பிரதேச  மக்கள்,  வர்த்தகர்கள்,  வாடகை வாகன உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். சுரே ரஞ்சனின் உடலம்  சோனப்பு இந்து மயானத்தில்  தகனம் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0