உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மர்மப் பையில் மனித உடல்? – அவுஸ்ரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்கு!!

உலக செய்திகள் 1 வாரம் முன்
80 பார்வைகள்

அவுஸ்திரேலியாவில் கைவிடப்பட்ட பயணப்பை ஒன்றிற்குள் மனித உடல் இருப்பதாகக் கருதி ஆரம்பிக்கப்பட்ட கொலை வழக்கு விசாரணை, அது மனித உருவத்தை ஒத்த பொம்மை என்ற உண்மை கண்டறியப்பட்ட பின்னர், முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ‘ஓலன்’ (Oallen) கிராமப் பகுதியில் சிற்றுந்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த பயணப்பையைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இதனை ஒரு கொலைச் சம்பவமாகக் கருதிய காவல்துறை, உடனடியாக சிறப்புப் புலனாய்வுத் துப்பறியும் நிபுணர்கள் மற்றும் தடயவியல் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி விசாரணையை துரிதப்படுத்தியது.

எனினும் தடயவியல் பரிசோதனையில், அது மனித உடல் அல்ல என்பதும், ஆடைகள், முடி, மூக்குத்தி அணிவிக்கப்பட்ட மனித உருவத்தை ஒத்த தத்ரூபமான பொம்மை என்பதும் தெரியவந்தது.

அந்தப் பொம்மையில் காயங்கள் மற்றும் உராய்வுகள் போன்ற அடையாளங்கள் இருந்ததால், அது மனித உடல் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

இது குறித்துக் கருத்து தெரிவித்த நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை கண்காணிப்பாளர் லிண்டா பிராட்பரி, “ஆரம்பத்தில் அது மனித உடல் என்றே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மனித எச்சங்களைப் போலவே மிகவும் தத்ரூபமாக இருந்தபோதிலும், விஞ்ஞான பரிசோதனைகள் மூலம் அது பொம்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சரியான நடைமுறைகளைப் பின்பற்றி விசாரணை நடத்தப்பட்டதால் இதில் எந்த வருத்தமும் இல்லை எனக் குறிப்பிட்ட காவல்துறை, இந்த விசித்திரச் சம்பவத்தின் விசாரணையை அதிகாரப்பூர்வமாக நிறைவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0