உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
75 பார்வைகள்

நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது   செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட்களான ஜெயசிங்க (63373), அத்துவர் (91775) மற்றும் பொலிஸ் உதவியாளர் ரசூல் அடங்கிய குழுவினர் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

அத்துடன்  இக்கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0