உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத் திறப்பு விழா

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
145 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் திறப்பு விழாவும் அபிஷேக விழாவும் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 6:45 மணியளவில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக  யாழ் ஆயரைச் செம்பியன் பற்று பங்குத் தந்தையும் பங்கு மக்களும்  பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். தொடர்ந்து, செம்பியன் பற்று வடக்கு சிறுவர்களின் கண்ணைக் கவரும் வரவேற்பு நடனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, புனிதர் வேடமணிந்த முன்பள்ளிச் சிறுவர், சிறுமியர் ஆயர், அருட்தந்தையர்கள் மற்றும் பங்கு மக்களை அன்போடு வரவேற்றனர்.

தொடர்ந்து, யாழ் ஆயரால் ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

பின்னர், யாழ் ஆயரின் தலைமையில் செம்பியன் பற்று பங்குத் தந்தை, செம்பியன் பற்று மண்ணின் மைந்தர்கள் மற்றும் யாழ் மறைமாவட்ட அருட்தந்தையர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியின் போது ஆலயத்தின் ஒவ்வொரு தூண்களும் ஆசீர்வதிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன.

நினைவு மலர்கள் வெளியீடு:

கூட்டுத் திருப்பலி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புதிய ஆலயத்திற்கான “திறப்பு விழா நினைவு மலர்” வெளியிடப்பட்டதுடன், அதன் முதற்பிரதிகளைச் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து, செம்பியன் பற்று மண்ணின் முதல் குருவான மறைதிரு மணி லொறன்சு அடிகளாரின் 30-வது நினைவு ஆண்டினைச் சிறப்பிக்கும் முகமாக, செம்பியன் பற்று பங்கு மக்களால் “ஊழியன்” எனும் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் இலங்கை முழுவதிலும் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் வருகை தந்த திரளான மக்களுடன் நூற்றுக்கணக்கான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0