யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி.பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு இன்று (10.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீட சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி.பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று (10) காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர் பி.பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.