உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்க.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
118 பார்வைகள்

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
38 தமிழக மீனவர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குவர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள், யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும், இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதி செய்து, திட்டமிட்டு கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள தமிழக மீனவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக மீனவர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டுமென என கோரிக்கை முன்வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0