உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

உலக செய்திகள் 1 வாரம் முன்
131 பார்வைகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100% வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய வர்த்தகம் உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்ய உதவுவதாகவும் செனட் சபை தெரிவித்துள்ளது.

லின்ட்ஸி ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரானைத் தண்டிக்கும் சட்டம் 2026′ (the Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026) எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலம், செனட் சபையில் 86-11 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த சட்டமூலம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுமதி அளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்வாக்கியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுடன் சேர்த்து, ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் 1996 ஆம் ஆண்டின் ஈரான் பொருளாதாரத் தடைச் சட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 2031 வரை இந்த சட்டமூலம் நீடிக்கிறது.

உக்ரைனின் தீவிர ஆதரவாளரான மறைந்த குடியரசுக் கட்சி செனட்டர் லின்ட்ஸி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமெந்தல் ஆகியோரால் இரு கட்சிகளின் ஆதரவுடன் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0