உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை மோசமாகி வருவதாகத் தகவல்!

உலக செய்திகள் 1 வாரம் முன்
105 பார்வைகள்

ஈரானின் புதிய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கமேய்னியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆட்சியின் உயர் மட்டங்களில் இது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு இராணுவத் தாக்குதலில் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கொமெய்னி புதிய உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.

இருப்பினும், பதவியேற்ற நாள் முதல் அவர் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது தனது தந்தையின் இறுதிச் சடங்கிலோ நேரடியாகப் பங்கேற்காமல் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

குறித்த தாக்குதலில் அவரும் காயமடைந்து தோற்றச்சிதைவுக்கு உள்ளானதால் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கமேய்னி 90% செயலிழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் அவரை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக உள்ளதை ஒப்புக்கொண்டிருந்தார்.

ஈரான் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்குச் சாதாரண காயங்களே ஏற்பட்டதாகத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், தற்போது இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள இச்செய்தி குறித்து ஈரான் அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0