உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; நால்வர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
134 பார்வைகள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் புகையிரத விபத்தொன்றில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில், கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் லுனுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.

இவ்விபத்தில் காயமடைந்து மாறவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

தங்கொடுவை – சுமகி சந்தை மற்றும் மெடிகொடுவை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் சாரதி பலத்த காயமடைந்து மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், நிகவெரட்டிய – குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாகத் திரும்ப முற்பட்ட வேளையில், எதிர்வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்து படுகாயமடைந்த 52 வயதுடைய பெண் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆம் கட்டை மைல்கல் பகுதிக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இளைஞர் இருவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சிவனகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார்.

மேலும், குறித்த வீதி விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0