உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உந்துருளிகள் அதிக விலைக்கு விற்பனை; வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
97 பார்வைகள்

உத்தியோகபூர்வ விற்பனை விலையை விடக் கூடுதல் விலைக்கு உந்துருளிகளை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக ஹெட்டிபொல பகுதியில் உள்ள 3 உந்துருளி விற்பனை முகவர்களுக்கு ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனைகளைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் உந்துருளிகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையிலும், போதிய கையிருப்பு இல்லாத சூழலையும் சாதகமாகப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்தன.

போலிப் பெயர்களில் கொள்முதல்: தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு நியாயமான முறையில் விநியோகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட காத்திருப்போர் பட்டியல் முறையை மீறி, சிலர் வெவ்வேறு பெயர்களில் உந்துருளிகளை வாங்கி, பின்னர் அவற்றை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஹெட்டிபொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் பின்வரும் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் விதித்தது.

உத்தியோகபூர்வ விலை ரூ. 790,000 ஆக உள்ள உந்துருளி ஒன்றை ரூ. 850,000 க்கு விற்பனை செய்து, ரூ. 60,000 மேலதிக தொகையைப் பெற்றுள்ளது.

கூடுதல் விலைக்கு விற்றமை மற்றும் விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறியமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ. 10,000 வீதம் ரூ. 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

ரூ. 790,000 பெறுமதியான உந்துருளியை ரூ. 845,000 க்கு விற்றமை மற்றும் விலையைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக தலா ரூ. 10,000 வீதம் ரூ. 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் உந்துருளிகளின் விலையைக் காட்சிப்படுத்தத் தவறியமைக்காக ரூ. 5,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

உந்துருளிகளைக் கொள்முதல் செய்வதற்கு முன்னர் அவற்றின் உத்தியோகபூர்வ விலைகளைச் கவனமாக சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அநியாயமாக அதிக விலை கோரும் அல்லது விலையைக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் குறித்து 1977 என்ற அவசர உதவி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0