உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டெங்கு நோய் பரவல் தீவிரம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
63 பார்வைகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 89,639 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

மாதாந்தத் தரவுகளின்படி, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அம்மா மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 29,973 ஆகும்.

ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 7,866 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 6,013 நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 5,721 நோயாளர்களும் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 5,651 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 4,292 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் மாகாணங்களில் மேல் மாகாணத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.93 சதவீதமான, அதாவது 47,445 நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக தென் மாகாணத்தில் 13,302 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,971 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 7,383 நோயாளர்களும், வடமேல் மாகாணத்தில் 4,465 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 3,703 நோயாளர்களும், ஊவா மாகாணத்தில் 2,482 நோயாளர்களும், வடமத்திய மாகாணத்தில் 1,574 நோயாளர்களும் மற்றும் வட மாகாணத்தில் 1,314 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 17,765 நோயாளர்களும், கண்டியில் 6,366 நோயாளர்களும், மாத்தறையில் 5,953 நோயாளர்களும், களுத்துறையில் 5,841 நோயாளர்களும், காலியில் 4,936 நோயாளர்களும், இரத்தினபுரியில் 4,860 நோயாளர்களும் மற்றும் கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசத்தில் 3,613 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும்.

தற்போது உயிரிழப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளதுடன், நாடு முழுவதும் மேலும் 119 வைத்திய அதிகாரி பிரிவுகள் அதி அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0