உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சைக்கிள்கள் திருட்டு; போதைப்பொருளுடன் இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
58 பார்வைகள்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின்போது, கல்முனைக்குடி செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய சகோதரர்கள் இருவர், 3 திருடப்பட்ட சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருடிய 2 சைக்கிள்களை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் தலா 2,400 ரூபாவுக்கு விற்றுள்ளமை தெரியவந்தது. அதேபோல், கல்முனை பகுதியில் வைத்து மற்றொரு சைக்கிளை 1,700 ரூபாவுக்கு வாங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களையும் பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0