தாஸ்நகர் விபுலானந்தர் முன்பள்ளியின் மழலைகள் திறனாய்வு நிகழ்வு…!
வவுனியா மகாறம்பைக்குளம்-தாஸ்நகர் விபுலானந்தர் முன்பள்ளியின் 2026ம் ஆண்டிற்கான வருடாந்த மழலைகள் திறனாய்வு நிகழ்வு இன்று (09.08.2026) முன்பள்ளியின் பொறுப்பாசிரியர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் செயலாளரும் சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலய முன்பள்ளி ஆசிரிய வளவாளர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் சி.சந்திரசேகரம் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக மகாறம்பைக்குளம் குடும்பநல உத்தியோகத்தர், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முன்பள்ளி சிறார்களின்விளையாட்டு நிகழ்வுகள், இசையும் அசையும் நிகழ்வு, விநோத உடை நிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.





