உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் : ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
76 பார்வைகள்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர்.

பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்

கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக் கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

77 0 0