தாய்லாந்தில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்திற்குச் சென்ற தாய்லாந்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தாய்லாந்து காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.