உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

பேருந்துக்காக காத்திருந்த பெண் டிப்பர் மோதி பலி!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
31 பார்வைகள்

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பஸ்ஸுக்காகக் காத்திருந்த 46 வயதுடைய பெண் ஒருவர் மீது சிறிய ரக டிப்பர் வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது இரு மகன்களும் படுகாயமடைந்துள்ளனர்.

மகனுக்குப் பரிகார பூஜை நடத்துவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் ஏனைய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக நகரத்துக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றிருந்தபோதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தம்புள்ளை, கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துவிட்டு, கடந்த 8ஆம் திகதிதான் நாடு திரும்பியிருந்தார் என்று அவரது உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

மூத்த மகனுக்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பஸ்ஸுக்காகக் காத்திருந்த வேளையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0