உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

அமைச்சர் சந்திரசேகரன் ‘கருப்பு பணத்தில் கவுண்டமணி சீனு’ பரபரப்பு!

குற்றம் 10 மணி நேரம் முன்
26 பார்வைகள்

ஒஸ்லோ, ஜூலை இருபத்தேழு, நார்வே தமிழ் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், இலங்கை மீன்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நார்வேயில் நடத்திய உத்தியோகபூர்வ பயணத்தின் போது, ‘உட்சிக்டென் செல்ஸ்காப்ஸ்லோகேல் ஏ.எஸ்’ என்ற தனியார் நிறுவனத்தால் அவருக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் அதிதன் குமாரசாமி என்பவரின் சந்தேகத்திற்குரிய பின்னணியும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘உட்சிக்டென் ஏ.எஸ்’ நிறுவனம், ஒரு தொண்டு நிறுவனம் அல்ல; அது ஒரு தனியார் வணிக நிறுவனம். ஆனால், ஒரு உத்தியோகபூர்வ வெளிநாட்டு அமைச்சருக்கு இந்த நிறுவனம் இலவச சேவையை வழங்கியுள்ளது. ஒரு இலாப நோக்கு நிறுவனம், ஒரு அரசாங்க அமைச்சருக்கு ஏன் இலவசமாக இடத்தை வழங்க வேண்டும்? இது லஞ்சமா, இல்லை ‘அதிதி தேவோ பவ’வா? ‘கருப்பு பணத்தில் கவுண்டமணி சீனு’ குமாரசாமியின் மர்மம்!, இந்த விவகாரத்தின் முக்கிய நபரான அதிதன் குமாரசாமி, நார்வே தமிழ் சமூகத்தில் பிரச்சனைக்குரிய நற்பெயர் கொண்ட நபராக அறியப்படுகிறார். இவர் ஈழம் தமிழ்ஸ்’ என்ற அமைப்பின், தேசியப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவரது பின்னணியில் உள்ள மர்மமும், இவருக்கும் இலங்கை அமைச்சருக்கும் இடையிலான உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இவர் தமிழ் சங்கம் நோர்வே அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ வருகையின் போது, இவர் ஏன் தலையிட வேண்டும்? இதில் ஏதேனும் ‘அதிதன்’ திட்டம் இருக்கிறதா? செலவுகள் மறைக்கப்பட்டதா? கேள்விக்குறியாகும் பதில்! அமைச்சர் தனது செலவுகளை எதுவும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. நோர்வே அரசாங்கமும் இந்த செலவுகளை ஏற்கவில்லை என்று தெரிகிறது. இந்த தனியார் நிறுவனம் லாப நோக்குடையது மற்றும் அதற்கு எந்த கட்டணமும் செலுத்தப்படவில்லை என்றால், இந்த நிகழ்விற்கான அனைத்து செலவுகளையும் யாரோ ஒருவர் ஏற்க வேண்டும். இந்த செலவுகள் இலங்கையில் யாராலோ மறைத்து செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது. இது லஞ்சத்தின் தன்மையை மறைக்கும் ஒரு உத்தியாக பார்க்கப்படுகிறது. நார்வே போலீஸ் முடிவு. ஆனால், ஒரு தனியார் நிறுவனம் ஒரு வெளிநாட்டு அமைச்சருக்கு வழங்கிய இந்த ‘இலவசசேவை, லஞ்சம் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை அமைச்சர் ஒருவருக்கு, குறிப்பாக ‘கருப்பு பணம்’ தொடர்பான விவகாரங்களில் சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் ஒரு நபரால், ஒரு தனியார் நிறுவனம் இத்தகைய விருந்தோம்பலை வழங்கியதும், அதை நார்வே போலீஸ் விசாரிக்க, ஒரு பெரிய ஊழலாக கருதப்படுகிறது. மாண்புமிகு அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் இந்தப் பயணம், ‘கருப்பு பண பரிமாற்றத்திற்கான’ புதிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம், நார்வேயில் உள்ள தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாக, அமைச்சர் சந்திரசேகரன், ஒரு தனியார் நிறுவனத்தின் ‘இலவச விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டது ஏன்? அதிதன் குமாரசாமி, இவர் யார்? இவருக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு? நார்வே போலீஸ், ஏன் இந்த ஊழலை மூடி மறைக்கிறது?

இதுதான் நார்வே தமிழ் சமூகத்தின் கேள்வி!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

குற்றம்

காட்டுக்குள் மக்களை குடியமர்த்த திட்டம்; அதிகாரி மீது குற்றச்சாட்டு.!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. டென்சியா கிரிதரன் தொடர்பில் தினகரனுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு,…

64 0 0
குற்றம்

புதுக்குடியிருப்பில் வீதியை ஆக்கிரமித்துச் சட்டவிரோத கட்டிடம்:அதிகாரிகள் மௌனம் காப்பதாக மக்கள் கொந்தளிப்பு!

புதுக்குடியிருப்பு கோம்பாவில் துர்க்கா வீதியும் பாண்டியன் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியான மாம்பழம் சந்தி என்று பலராலும் கூறப்படும் சந்தியில் புதுக்குடியிருப்பு முன்னாள் தவிசாளர்ஆ. தவக்குமார் அவர்களின் மச்சானான…

678 0 0
குற்றம்

PickMe, Uber சாரதிகள் மீது தொடரும் கொடூர தாக்குதல்கள்!

கடந்த சில நாட்களாக PickMe மற்றும் Uber செயலிகள் மூலம் சேவையாற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் மீது முச்சக்கரவண்டி சங்க சாரதிகள் தாக்குதல் நடத்துவதும், பொது வெளியில் தகாத…

146 0 0
குற்றம்

மீற்றர் வட்டிக் கொடூரம்; அடாவடித்தனமாக பெருமளவு சொத்துக்கள் பறிப்பதாக முறைப்பாடு.!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு, கருமாரி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த ரகுவரன் என்பவர் மீது மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குதல், பணத்தை மீள வழங்காதவர்களை அச்சுறுத்தல், சொத்து அபகரிப்பு…

661 0 0