டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!
மஸ்கெலியா பொலிஸ் மற்றும் மவுசாகலை பிரஜா பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் லக்கம் கடைவீதியில் சிரமதானப் பணி இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் சமகாலத்தில் நடைமுறையில் இருக்கின்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் புஸ்பகுமார அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மஸ்கெலியா பொலிஸ் மற்றும் மவுசாகலை பிரஜா பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி ஒன்று லக்கம் கடை வீதி தொடக்கம் துனுதுடு ஓயா சிங்கள வித்தியாலயம் வரை முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அதிமாக பயன்படுத்தும் குறித்த பாதையின் இருமருங்கிலும் ஓடுகின்ற நீர்நிலையை சீராக வைத்திருக்கவும், பாதையை சுத்தப்படுத்தவும் இவ்வேலைத்திட்டம் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
எமது சுற்றுச்சூழல் நலன் கருதிய செயல்திட்டத்தில் இணைந்து கொண்டு சிரமதானப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி கலந்து கொண்டனர்.



