உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு விசேட செயற்திட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
23 பார்வைகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் ஏற்பாட்டில் ‘டெங்கற்ற
கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும்
கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) சம்மாந்துறையில்
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நடைபெற்றதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
இச்செயற்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

“டெங்கு நோயற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது நமது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்” என மாநாட்டில் உரையாற்றிய தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதே இச்செயற்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன்கீழ் சுற்றுச்சூழல் தூய்மை, டெங்கு பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வு மற்றும் மக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோயை ஒழித்து, சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாக இச்செயற்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை மற்றும் அப்துல் வாசித் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் ஹாசிம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஷாரப் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

22 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

52 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0